உசிலம்பட்டியில் திருவள்ளுவருக்கு கோயில் – வெகுவிமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு விழா!

உசிலம்பட்டி அருகே திருவள்ளுவருக்கு சிலையுடன்  கூடிய கோயில் அமைக்கப்பட்டு இன்று குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே  எழுமலையில் இராம கிருஷ்ணா மற்றும் விவேகானந்தர் மடம் அமைந்துள்ளது. இந்த மடத்தில்…

உசிலம்பட்டி அருகே திருவள்ளுவருக்கு சிலையுடன்  கூடிய கோயில் அமைக்கப்பட்டு இன்று குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே  எழுமலையில் இராம கிருஷ்ணா
மற்றும் விவேகானந்தர் மடம் அமைந்துள்ளது. இந்த மடத்தில் 11 அடியில் கோபுரங்கள் எழுப்பப்பட்டு சுமார் 3 அடி உயரத்தில் திருவள்ளுவருக்கும், ஞான விநாயகர் சிலைகளும் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இந்த கோயிலின் குடமுழுக்கு விழா இன்று சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க
கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு பூஜை வெகுவிமர்சையாக
நடைபெற்றது. தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கும் ஞான விநாயகர் சிலைக்கும் சிறப்பு
அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.