அடிப்படை வசதிகள் கேட்டு விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு அடையாள அட்டைகளை வீசி நரிக்குறவர் இன மக்கள் போராட்டம்
இலவசமனை பட்டா, சாதி சான்றிதழ் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி
நரிக்குறவர் சமுதாயத்தினர் விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வாயிலில் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டைகளை வீசி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டு பகுதியிலுள்ள எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாயத்தினை சார்ந்த
குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும்இவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, சாதி சான்றிதழ், மின்சார வசதிகள் வழங்கப்படாமல் உள்ளதால் அதனை செய்து தரக்கோரி நரிக்குறவ சமுதாயத்தினை சார்ந்தவர்கள் விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வாயிலில் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டையை தரையில் வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இது தொடர்பாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். நரிக்குறவ சமுதாயத்தை சார்ந்தவர்கள் ஆட்சியர் அலுவலக வாயிலில் குடும்ப அட்டை, ஆதார் அட்டைகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.








