தங்கம், வெள்ளி விலை நிலவரம்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.42,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. நடுத்தர மக்களின் சேமிப்பு முதலீடாக விளங்குவதில் எப்போதுமே தங்கம் முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்த ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யும்…

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.42,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நடுத்தர மக்களின் சேமிப்பு முதலீடாக விளங்குவதில் எப்போதுமே தங்கம் முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்த ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யும் போது தங்கத்தின் விலை அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து
பட்ஜெட் தாக்கல் செய்த தினம் முதல் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 2ம் தேதி தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.

இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.42,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.5,365க்கு விற்கப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் குறைந்து ரூ.74க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.