முக்கியச் செய்திகள் தமிழகம்

மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை அடுத்து மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

தூத்துக்குடியில் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்ததை அடுத்து, 61 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் மாதம் 14ம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்கள் இனபெருக்கத்தை கருத்தில் கொண்டு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்தவகையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது. இதனால் தமிழ்நாட்டில் 13 கடலோர மாவட்டங்களை சேர்ந்த சுமார் 5லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலையிழந்திருந்தனர்.

மீன்பிடி தடைகாலம் தொடங்குவதற்கு முன்பே கொரோனா தொற்று பரவல், டீசல் விலை உயர்வு, மீன்வரத்து குறைவு காரணமாக மார்ச் மாதம் முதலே மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இந்த ஆண்டில் மட்டும் 61 நாட்கள் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவுடன் மீன்பிடி தடைகாலம் முடிவடைந்ததை தொடர்ந்து, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்ட விசைப்படகுகள் இன்று அதிகாலை ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றன.

மீன்வளத்துறை உதவி இயக்குனர் பிரின்சி வயலா ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகு போக்குவரத்தை தொடங்கி வைத்தார். தூத்துக்குடி துறைமுகத்தில் மொத்தம் 240 பதிவு செய்யப்பட்ட மீன்பிடி விசைப்படகுகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி சுழற்சி முறையில் இன்று 120 விசைப்படகுகளை கொண்ட மீணவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. மீனவர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

இது பற்றி கூறிய விசைபடகு உரிமையாளர் கிருபா, “அரசு தங்களுக்கு மீன்பிடிக்க உதவிடும் வகையில் 1,100 லிட்டர் டீசல் மானியமாக தருகிறது. ஆனால் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு உதவியாக 5 ஆயிரம் லிட்டர் டீசல் மானியமாக தந்தால் உதவியாக இருக்கும். இது எங்களது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில் அதற்காக மானியம் வழங்கினால் மீனவர்களுக்கு உதவியாக இருக்கும்.” என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழகம் வந்தடைந்த 5 லட்சம் டோஸ் தடுப்பூசிகள்

Gayathri Venkatesan

வைகாசி விசாகம் – முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

Web Editor

கொரோனா நோயாளியைக் கொலை செய்த அரசு மருத்துவமனை பெண் ஊழியர்!