ஆளுநர் ரவியின் குடியரசு தின தேநீர் விருந்து – காங்கிரஸ் புறக்கணிப்பு…!

குடியரசு தினத்தன்று ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்ததை  நினைவுகூறும் வகையில் ஒவ்வோரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம்.

இந்த நிலையில் குடியரசு தினத்தன்று ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”தமிழ்நாடு மக்களால் பெரும்பான்மையாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் குடியரசு தினத்தன்று வழங்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.