’நம்ம ஊரு மோடி பொங்கல் விழா’ நிகழ்வில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு….!

திருச்சி மன்னார்புரத்தில் நடைபெற்ற ’நம்ம ஊரு மோடி பொங்கல் விழா’ நிகழ்வில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா அந்தமானிலிருந்து தனி விமானத்தில் திருச்சிக்கு நேற்று வருகை தந்தார். அவரை தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார்.

நேற்று மாலை அவர் புதுக்கோட்டையில் நடைபெற்ற பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரனின் ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பிரசாரப் பயணத்தின் நிறைவு விழாவில் பங்கேற்று உரையாற்றினார்.

அடுத்ததாக இரண்டாம் நாளான இன்று இன்று காலை திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து அவர், மன்னார்புரத்தில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்வில் பங்கேற்றார். ‘நம்ம ஊரு மோடி பொங்கல் விழா’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 1,008 பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது. இந்த விழாவில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய பாஜக நிர்வாகிகளும் ஏராளமான பாஜக தொண்டர்கலும் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.