கூவம் ஆற்றில் இறங்கி போராடிய தூய்மை பணியாளர்கள் ; கைது செய்த காவல்துறை….!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூவம் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்கக் கூடாது, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உழைப்பாளர் சிலை, கருணாநிதி நினைவிடம், தலைமைச் செயலகம் முன்பு என பல்வேறு இடங்களில் அவர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் 158-வது நாளான இன்று தங்களது கோரிக்கையை நிறைவேற்றக் கோரி கூவம் ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அபோது அவர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.