அரசு ஊழியர்கள் 100 சதவீதம் பணிக்கு வரவேண்டும்: புதுச்சேரி அரசு

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் 100 சதவீதம் பணிக்கு வரவேண்டுமென புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்தால், அரசு அலுவலகங்களில் குரூப் பி மற்றும் குரூப் சி ஊழியர்கள் 50 சதவீதம்…

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் 100 சதவீதம் பணிக்கு வரவேண்டுமென புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்தால், அரசு அலுவலகங்களில் குரூப் பி மற்றும் குரூப் சி ஊழியர்கள் 50 சதவீதம் மட்டுமே சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும் என புதுச்சேரி அரசு கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதையடுத்து, அரசு அலுவலகங்களில் குரூப் பி மற்றும் குரூப் சி ஊழியர்கள் நாளை முதல் அனைத்து கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றி 100 சதவீதம் பணி செய்ய வேண்டும் என புதுச்சேரி அரசு சார்பு செயலர் ஜெய்சங்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.