”இது இந்து சமய அறநிலையத்துறையின் பொற்காலம் “ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

”இது இந்து சமய அறநிலையத்துறையின் பொற்காலம் “ என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்பட்ட திருமண வாழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில் 34 இணையர்களுக்கான…

”இது இந்து சமய அறநிலையத்துறையின் பொற்காலம் “ என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்பட்ட திருமண வாழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில் 34 இணையர்களுக்கான திருமண விழாவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றா இந்த  விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, மா சுப்பிரமணியன், செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருமணம் செய்து கொண்ட இணையர்களுக்கு கட்டில், பீரோ உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது..

” செயல்பாபு என அழைக்கப்படக்கூடிய சேகர்பாபு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார். கல்வி, தொழில், பொருளாதாரம், சமயம் என அனைத்துத் துறைகளிலும் அனைத்து மக்களும் கோலோச்ச வேண்டும் என இந்த அரசு  நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.

சாதியின் பெயரால் யாரையும் தள்ளி வைக்கக்கூடாது. ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டியலின சமூக மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் அர்ச்சகராகியுள்ளனர்.
கோயில்களில் எந்த தவறும் நடந்துவிடக்கூடாது என கலைஞர் எப்படி செயல்பட்டோரோ, அதே வழியில் நாமும் செயல்படுகிறோம்.

இந்து சமய அறநிலையத்துறையின் பொற்காலம் இது. ஆண்டுதோறும் கூடுதல் நிதி ஒதுக்கி கோயில்களை சீரமைத்து வருகிறோம். இதுதான் திராவிட மாடல் அரசு. பக்தர்கள் மன நிறைவடைந்துள்ளார்கள். மக்களுக்கு நன்மை செய்யவே கோயில்கள் இருக்கின்றன ” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.