வளைகுடா பிராந்தியத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே நிலவும் போர் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் எரிசக்தி தட்டுப்பாட்டை சந்தித்து வருகின்றன.
மேற்காசிய போரால் நாட்டில் கியாஸ் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டதாக சொல்லப்பட்டதை அடுத்து பெட்ரோலியத்துறை உயரதிகாரிகள் அதனை தீவிரமாக கண்காணித்து வினியோகத்தை நெறிமுறைப்படுத்தினர். இந்த போரால் உலக நாடுகள் பலவற்றுக்கும் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலைமை, மற்றும் அதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், இதில் இருந்து மீள்வதற்கு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் பற்றி கலந்து ஆலோசிக்க மத்திய அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுகிறது. இது குறித்த நேற்று அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஒவ்வொரு கட்சி சார்பிலும் 2 பேர் பங்கேற்பார்கள். மேலும் முன்கூட்டியே திட்டமிட்ட பணிகள் காரணமாக இக்கூட்டத்தில் பங்கேற்க முடியாது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.







