OnePlus Nord 5-இன் அடுத்த தலைமுறை மாடலாக OnePlus Nord 6 5G விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. இந்த நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்களை OnePlus India வெளியிட்டுள்ளது. மேலும் OnePlus Nord 6 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என்றும் தெரிவித்துள்ளது.
OnePlus Nord 6 5G ஸ்மார்ட்போன் 9000mAh திறன் கொண்ட battery – யுடன் வருகிறது. மேலும், 80W அதிவேக சார்ஜிங் மற்றும் ‘Bypass charging’ வசதியும், 27W திறன் கொண்ட ‘wired reverse charging’ வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது.
OnePlus Nord 6 5G ஆனது, Call of Duty Mobile, BGMI மற்றும் Free Fire Max போன்ற பிரபலமான AAA மொபைல் கேம்களை, கணினிக்கு இணையான 165 FPS வேகத்தில் விளையாடலாம். மேலும், மிக விரைவான 3200Hz Touch Sampling- காக ஒரு ‘Touch Reflex Chip’-உம், உள்ளமைக்கப்பட்ட ‘Spatial Audio Booster’-உம் இதில் இடம்பெற்றுள்ளன.
Nord 6 5G ஸ்மார்ட்போனில் ‘G2 Wi-Fi chip’ பொருத்தப்பட்டுள்ளது; இது ‘5G Advanced’ தொழில்நுட்பத்தை ஆதரிப்பதுடன், Reliance Jio போன்ற சேவை நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும்போது, வழக்கமானதை விட 3 மடங்கு அதிகபட்ச தரவு வேகத்தை (peak data speeds) வழங்குகிறது.
OnePlus 15 மாடலைப் போலவே, Nord 6 5G-யும் 165Hz Refresh Rate கொண்ட 1.5K AMOLED ‘Sunburst HDR’ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. வெளிப்புறச் சூழலில் தெளிவாகப் பார்ப்பதற்கு உதவும் வகையில் 1800nits HBM ஆதரவும், நுணுக்கமான விவரங்களைக் காட்டுவதற்கு 3600nits வரையிலான HDR உச்ச பிரகாசமும் இதில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 3840Hz PWM Dimming ஆதரவும் இதில் உண்டு;
இத்திரையானது குறைந்தபட்சம் 2nits வரையிலான பிரகாச அளவை ஆதரிக்கும் திறன் கொண்டது. அத்துடன், இத்திரையானது ‘Aqua Touch 2.0’ ஆதரவுடனும் வெளிவரவுள்ளது. OnePlus Nord 6 5G தொலைபேசியானது Qualcomm Snapdragon 8s Gen 4 SoC செயலி மூலம் இயங்கவுள்ளது.
OnePlus Nord 6 5G இந்தியாவில் எப்போது அறிமுகமாகிறது……?
OnePlus Nord 6 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏப்ரல் 7, 2026 அன்று, இந்திய நேரப்படி (IST) இரவு 7 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. இந்நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பர போஸ்ரின் படி, இந்த ஸ்மார்ட்போன் Amazon தளத்தில் விற்பனைக்குக் கிடைக்கும் என்று தெரிகிறது. மேலும் இந்தத் ஸ்மார்ட்போன் Holographic Quick Silver, Fresh Mint மற்றும் Low Reflection Pitch Black ஆகிய மூன்று வண்ணங்களில் வெளியாகிறது.







