மன்னார்குடியில் அரசு பள்ளி மாணவிகள் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மற்ற மாணவிகள் அச்சமடைந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று அதிகமாக உள்ள நிலையில் மாவட்டத்தில் மொத்தம் 50க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மன்னார்குடியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி படிக்கும் நான்கு மாணவிகளுக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மற்ற மாணவிகள் 422 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யபட்டது. இதில் மேலும் 11 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அவர்கள் அனைவரும் மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.







