வங்க தேசத்தின் முதல் திருநங்கை வாசிப்பாளரான தாஷ்னுவ அனன் ஷிஷிர் தன்னுடைய முதல் செய்தி வாசிப்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஆனந்த கண்ணீர்விட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
உலக மகளிர் தினத்தையொட்டி வங்கதேசம் தனியார் செய்தி தொலைக்காட்சி மூன்று நிமிட செய்தி வாசிப்பு நிகழ்ச்சியை வழங்கினார். சுகாதாரத்தில் இளங்கலை முடித்துள்ள தாஷ்னுவ அனன் (29) செய்தி வாசிப்பாளராக வேண்டும் என்பதற்காகப் பல நிறுவனங்களில் முயற்சி செய்துள்ளார். ஆனால் தலைநகர் தாக்காவில் உள்ள ‘Boishakhi’ என்ற தனியார் தொலைக்காட்சியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் தன்னுடைய முதல் செய்தி வாசிப்பு நிகழ்ச்சியை முடித்த தாஷ்னுவ அனன் ஆனந்த கண்ணீர்விட்ட அழுத காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதுகுறித்து பேசி தாஷ்னுவ அனன், “நான் திருநங்கையாக உணர்ந்தபோது நான் ஆணா பெண்ணா என்ற மனக்குழப்பத்திலே சிக்கித் தவித்தேன். நான் திருநங்கை என வீட்டில் சொன்னபோது என்னிடம் என் அப்பா பேசுவதை நிறுத்திவிட்டார். அதன்பிறகு வீட்டைவிட்டு ஓடி வந்துவிட்டேன். ஆனால் படிப்பை மட்டும் விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். பல கேளிகள், கிண்டல்களை, பாலியல் சீண்டல்கள் சந்தித்தபோதும் படிப்பில் கவனமாக இருந்தேன். சமூக புறக்கணிப்பால் சில நேரங்களில் உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்திருக்கிறேன். வங்கதேசத்தில் மட்டும் பத்து லட்சத்துக்கும் அதிகமான திருநங்கைகள் உள்ளனர். அவர்களில் பலர் சாலைகளில் பிச்சை எடுத்துக்கொண்டும் அல்லது பாலியல் தொழிலில் ஈடுபட்டும் உள்ளனர். அப்படிப்பட்டவர்களும் என்னைப்போல் தன்னம்பிக்கையுடன் வெற்றிபெறத்தான் கடவுள் என்னைப் படைத்திருக்கிறார்” என்கிறார் தாஷ்னுவ.