முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மாதவிடாய் குறித்த சமூக தடையைக் நீக்கவேண்டும்: குஜராத் உயர் நீதிமன்றம்!

மாதவிடாய் நாட்களில் பெண்கள் சமையலறை, கல்வி நிலையம், வழிபாட்டுத் தளங்கள் மற்றும் பொது இடங்களுக்கு செல்வதற்கான தடையை நீக்கவேண்டும் என குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத்தில் உள்ள ஸ்ரீ சஹஜானந்த் பெண்கள் கல்லூரி விடுதியில் கடந்த ஆண்டு மாதவிடாயிலிருந்த மாணவி ஒருவர் விடுதி சமையலறைக்குச் சென்றுள்ளார். இக்கல்லூரி விடுதியில் மாணவிகள் மாதவிடாய் நாட்களில் தங்கத் தனியறை ஒதுக்கப்பட்டுள்ளது. மாதவிடாய் நாட்கள் வரை அவர்கள் அங்குதான் தங்கவேண்டும். அந்நாட்களில் விடுதியின் பொதுவெளி மற்றும் சமையலறை பகுதிகளுக்குச் செல்ல அனுமதியில்லை.

இந்நிலையில் சமையலறைக்குச் சென்ற மாணவி யார் என்பதை கண்டுபிடிக்க விடுதியிலிருந்த 68 மாணவிகளின் ஆடைகளை நீக்கி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கல்லூரியின் இந்த மோசமான நடவடிக்கை சமூகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

குஜராத் உயர் நீதிமன்றம்

இதனையெடுத்த இந்த விவகாரம் குறித்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுக்கப்பட்டது. இதுகுறித்த தீர்ப்பளித்துள்ள குஜராத் உயர் நீதிமன்றம், “நம்முடைய சமூகத்தில் மாதவிடாய் என்பது சமூகத் தடையாக உள்ளது. இதனால் பெண்கள் பொது வெளியில் சுதந்திரமாகச் செயல்படமுடியாமல் உள்ளனர். மாதவிடாய் காரணமாக நாட்டில் 23 சதவீதமான பெண்கள் பள்ளியிலிருந்து இடைநிற்றல் செய்யப்படுகிறார்கள். மாதவிடாய் குறித்த இந்த சமூகத் தடை பெண்களை மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கிறது. இதன்காரணமாக மாதவிடாய் குறித்த சமூக தடையை கல்வி, பொது இடங்கள் வழிபாட்டுத் தளங்களிலிருந்து நீக்கவேண்டும். மாதவிடாய் என்பது இயற்கையான விஷயம் என்பதை குஜராத் அரசு பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்” என குஜராத் உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.


மாணவிகளிடம் மாதவிடாய் பரிசோதனை செய்த கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவில் கூறப்பட்டுள்ளது

Advertisement:

Related posts

’எனக்கு நீயும் உனக்கு நானும்’: பாகனைச் செல்லமாகக் கட்டியணைக்கும் குட்டி யானை

Karthick

அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

Saravana

திமுக பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை கொடுக்கிறது: பொள்ளாச்சி ஜெயராமன்

Karthick