வீலிங் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்ட இளைஞர் கைது!

செங்கல்பட்டு அருகே இரு சக்கர வாகனத்தில் வீலிங் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். சமீப காலமாக இளைஞர்கள்  இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்து அவற்றை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்வது அதிகரித்துள்ளது.…

செங்கல்பட்டு அருகே இரு சக்கர வாகனத்தில் வீலிங் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

சமீப காலமாக இளைஞர்கள்  இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்து அவற்றை சமூக
வலைதளத்தில் பதிவேற்றம் செய்வது அதிகரித்துள்ளது. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் இளைஞர் ஒருவர் வீலிங் செய்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியிருக்கிறார்.  இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.   இந்த வீடியோ குறித்த காட்சிகள் வெளியான நிலையில் செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படியுங்கள்: ஜப்பான் சென்று திரும்பிய மாணவனை கொண்டாடிய சக மாணவர்கள்!

காவல்துறை நடத்திய விசாரணையில் சம்பந்தப்பட்ட நபர் செங்கல்பட்டு அடுத்துள்ள புலிப்பாக்கம் பகுதியை சேர்ந்த கோகுல் என்பது தெரியவந்தது.  அவர் மகேந்திரா சிட்டி பகுதியில்,  உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.  அவர் தற்போது செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்துள்ள மல்ராசபுரம் பகுதியில் வசித்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது.  இதனை அடுத்து கோகுலை கைது செய்த  போலீசார்,  அவரது இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்த கோகுல் மீது,  பொது இடங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவது உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  கோகுலுக்கு இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கான லைசன்ஸ் கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.