ஜாலியா இருந்த ஒருத்தன் பட ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியீடு….!

ஜீவா நடிப்பில் உருவாகிவரும் ஜாலியா இருந்த ஒருத்தன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிறது.

நடிகர் ஜீவா – எம்.ராஜேஷ் கூட்டணியில் கடந்த 2009 ஆண்டு வெளியான திரைப்படம் ‘சிவா மனசுல சக்தி’ பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் ஜீவா – சந்தானம் காமெடி காட்சிகள், யுவனின் இசை மற்றும் பிஜிஎம்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஜீவா – ராஜேஷ் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. சுமார் 16 ஆண்டுகள் கழித்து இக்கூட்டணி இணைவதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் நடிகை இவானா நடித்துள்ளார். மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் இப்படத்தைத் தயாரிக்கின்றது.

இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6:00 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.