சட்டமன்ற கூட்டத்தொடர்: கருப்பு பேட்ஜ் அணிந்து திமுகவினர் வருகை…!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான திமுக எம்.எல்.ஏக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.

தமிழ் நாடு சட்டமன்றத்தின் முதல் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. தவெக அரசின் முதல் சட்டமன்ற கூட்டம் என்பதால், இந்த கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆளுநர் உரை நிகழ்த்துகிறார். இந்த உரையில் அரசின் புதிய திட்டங்கள், நோக்கங்கள் இடம் பெறும். அந்த உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசிப்பார். அதோடு அவை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும்.

தமிழ் நாட்டில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமை, கொலைகள், மின்வெட்டு , பயிர்க்கடன் தள்ளுபடி, எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

சட்டமன்றத்தின் முதல் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கும் நிலையில் தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் சட்டமன்ற வளாகத்திற்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான திமுக எம்.எல்.ஏக்கள் தவெக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் கருப்பு பேட்ஜ் அணிந்து வருகை தந்துள்ளனர். மேலும் அவர் கைகளில் தவெக அரசுக்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்தி “ரீல்ஸ் இங்கே ரியல் எங்கே” என்று முழக்கங்களை எழுப்பினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.