ஜப்பான் சென்று திரும்பிய மாணவனை கொண்டாடிய சக மாணவர்கள்!

பள்ளி சிறார் திரைப்பட போட்டியில் வெற்றி பெற்று ஜப்பான் சென்று திரும்பிய மாணவனை சக மாணவர்கள் ஆனந்தத்தில் துாக்கி கொண்டாடினர். நாமக்கல் மாவட்டம்,  பரமத்தி வேலுார் அருகே வெங்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்…

பள்ளி சிறார் திரைப்பட போட்டியில் வெற்றி பெற்று ஜப்பான் சென்று திரும்பிய மாணவனை சக மாணவர்கள் ஆனந்தத்தில் துாக்கி கொண்டாடினர்.

நாமக்கல் மாவட்டம்,  பரமத்தி வேலுார் அருகே வெங்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் அபினேஷ் கண்ணா மாநில அளவிலான பள்ளி சிறார் திரைப்பட போட்டியில் பங்கேற்று வெற்று பெற்றார்.  இவரை பள்ளி கல்வித்துறை சார்பில் ஐப்பான் நாட்டிற்கு 7 நாட்கள் பயணம் சென்று பல இடங்களை சுற்றிப் பார்த்தார்.  இந்நிலையில் சொந்த ஊருக்கு திரும்பிய அபினேஷ் கண்ணா இன்று காலை பள்ளி சென்றார்.  அப்போது அவருக்கு பள்ளியில் வெங்கரை பேரூராட்சி தலைவர் விஜி மாலை அணிவித்து வரவேற்றனர்.

சக மாணவர்கள் மகிழ்ச்சியில் அவரை தோளில் துாக்கி கொண்டாடினர்.  இதனையடுத்து அவர் பள்ளி மாணவர்களுக்கு,  ஆசிரியர்களுக்கு என அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.  அபினேஷ் கண்ணாவை பெற்றோர்கள் முத்தம் கொடுத்தும்,  ஆசிரியர்களும் அவர்களின் பாராட்டுகளையும்,  வாழத்துகளையும் தெரிவித்தனர்.

அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.