வேங்கைவயல் விவகாரம்; எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? – நீதிபதிகள் கேள்வி

புதுக்கோட்டை, வேங்கைவயலில் குடிநீரில் மலம் கலக்கப்பட்ட வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். புதுக்கோட்டை அருகே வேங்கைவாயலில், குடிநீரில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில், 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு…

புதுக்கோட்டை, வேங்கைவயலில் குடிநீரில் மலம் கலக்கப்பட்ட வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

புதுக்கோட்டை அருகே வேங்கைவாயலில், குடிநீரில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில், 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். இரட்டைக்குவளை, தாழ்த்தப்பட்டோரை கோயிலில் அனுமதிக்காதது மற்றும் நீர்த்தேக்க தொட்டியில் மலத்தை கலந்தது தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரட்டைக்குவளை, கோவில் அனுமதிக்காதது தொடர்பாக 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலந்தது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் தேடப்பட்டு வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைக்கேட்ட நீதிபதிகள், குற்றவாளிகள் கண்டிப்பாக தப்பிக்க முடியாது என குறிப்பிட்டனர். இது மிகவும் முக்கிய பிரச்சனை என தெரிவித்த நீதிபதிகள், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், மனித உரிமைகள் மற்றும் சமூகநீதி பிரிவு துணை ஆணையர் ஆகியோர் இவ்வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.