மு.க. ஸ்டாலின் தலைமயிலான கடந்த திமுக ஆட்சியில் தமிழ் நாட்டில் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் ரூ. 1,000 வழங்கப்பட்டது. முதலமைச்சர் விஜய் தேர்தலின் போது மகளிர் உரிமைத் தொகையானது, ரூபாய் 2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். தொடர்ந்து தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதனை தொடர்ந்து மகளிர் உதவித்தொகையானது எப்போது 1000 – லிருந்து 2500 – ஆக உயர்த்தப்படும் என்கிற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் தவெகவின் தேர்தல் வாக்குறுதியின்படி மகளிர் உரிமைத் தொகை உயர்வு விரைவில் அமல்படுத்தப்படும் என்று என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: மகளிர் உரிமைத்தொகையாக தற்போது 1000 ரூபாயாக வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் உரிமை தொகையை 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்கிடுவதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கண்டிப்பாக 2500 ரூபாய் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும். தமிழ்நாட்டில் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். முதலமைச்சர் கூறியது போல் 2500 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை விரைவில் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.




