உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் பக்தர்கள் வழங்கிய நன்கொடை மற்றும் காணிக்கை பணம், நகைகள் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அம்மாநில அரசு அமைத்த சிறப்பு புலனாய்வு குழு நடத்திய விசாரணையில் கோயில் ஊழியர்கள் 8 பேரை கைது செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் ரூ.7 கோடி முதல் ரூ.7.5 கோடி வரை நிதி மோசடி நடந்துள்ளது. இதுபற்றி பிரதமர் மோடி மௌனம் காப்பது ஏன்? ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக, கோயில்களை பயன்படுத்தி நிதி திரட்டி வருகின்றன. தமிழ்நாட்டில் கோயில்களை பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாஜக சொல்வதற்கு காரணம், அங்குள்ள பணத்தை கைப்பற்றுவதற்குத்தான்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.




