தமிழ் நாட்டில் ஆணவக்கொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் பட்டியல் சாதியைச் சேர்ந்த மென்பொறியாளர் கவின் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் ஆவணக்கொலைக்கு எதிரான தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும் என்கிற கோரிக்கையை மேலும் வலுப்படுத்தியது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வன்னி அரசு, “ஆணவக்கொலைக்கு எதிரான தனிச்சட்டம் நிச்சயம் இந்த ஆட்சியில் இயற்றப்படும். இந்த முயற்சி புதிதல்ல. கடந்த ஆட்சிக் காலத்தில் விசிக எம்.எல்.ஏ.க்கள் இதுகுறித்து பேசியுள்ளனர். ஆணவக்கொலைகளை தடுத்து நிறுத்துவதற்கு தனிச்சட்டம் இயற்றப்பட்டது என நீங்களே பாராட்டுவீர்கள்” என்று கூறியுள்ளார்.




