மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழ்நாட்டின் சுற்றுசூழலையும் விவசாயத்தையும் பாதுகாக்க நீதிமன்ற ஆணையின்படி கடந்த ஒரு வாரகாலமாக எனது தோழர்களுடன் சென்று சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறேன்.
குறிப்பட்ட ஒரு ஒருவர் காலத்தில் என்னை புண்படுத்தும் நோக்கில் கேள்வி கேட்டதால் பணிவோடு பதில் சொன்னேன். ஆனால் எனக்கு பத்திரிக்கையாளர்கள் சங்கங்கள் கண்டனம் தெரிவித்தனர். பத்திரக்கையாளர்களுக்கு உள்ள சுதந்தரம் எனக்கும் உள்ளது. கோவையிலும் அந்த சம்பவம் நடக்க கூடாது. அதனால் அந்த கேள்வியை கேட்பதாக இருந்தால் முதலில் கேளுங்கள் என கூறினேன்.
ஆளுநருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் தான் பணி செய்ய வேண்டும். ஆளுநர் மிகவும் நியாமாக நடந்து கொள்பவரா? விஜயை ஆட்சி அமைக்க அழைக்காமல் கேரளாவிற்கு செல்லும்போதே ஓரவஞ்சனை தெரிந்தது. கம்பம் சட்டமன்ற தொகுதி மதிமுக எம்.எல்.ஏ வை ராஜினாமா செய்ய சொல்லிவிட்டு மீண்டும் நிற்க வைத்து வெற்றி பெற வைத்தீர்களே… அது என்ன பெருச்சாலி பேரமா?
இந்த ஆட்சி நல்ல காரியம் செய்துள்ளது. தலைவிரித்தாடிய கமிஷன், கரெப்சன் இப்போது நீக்கப்பட்டுள்ளது. அதுதான் இமாயல சாதனை. எங்களை அவமதித்தாலும் 34 தொகுதிகளில் திமுகவை ஆதரித்து கூட்டணி தர்மத்திற்காக பிரச்சாரம் மேற்கொண்டோம். நான் திமுகவுக்குதான் ஓட்டுபோட சொன்னேன். ஆனால் மக்கள் விஜய்க்கு போட்டு விட்டார்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. தவெகவுடன் தோழமையில் தொடர்கிறோம். தவெக அரசு ஊழலை நீக்கியிருக்கிறது என்பது மக்களிக்கு இனிப்பான செய்தி.
மேகதாது அணையை கட்ட சொல்லி தூண்டிவடுவதே மத்திய சர்க்கார் தான். மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து மொத்த தமிழகமும் கொதித்தெழ வேண்டும். அன்புமணியின் நடைபயணத்தை நான் ஆதரிக்கிறேன். மதிமுக எம்.எல்.ஏக்கள் காணமல் போய்விட்டார்கள். மதிமுக தொண்டர்கள் திமுகவுடன் ஒட்டும் கூடாது உறவும் கூடாது எனக்கூறுகிறார்கள். தவெக அரசுக்கு கவசமாக இருப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.




