’காங்கிரஸ் மீண்டும் எழுச்சிப் பாதையில் செல்கிறது’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

காங்கிரஸ் கட்சி மீண்டும் எழுச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,”காங்கிரஸ் கட்சி மீண்டும் எழுச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. தேசிய…

காங்கிரஸ் கட்சி மீண்டும் எழுச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,”காங்கிரஸ் கட்சி மீண்டும் எழுச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி அதன் முக்கியத்துவத்தை இன்னும் இழக்கவில்லை. காங்கிரஸின் கட்டமைப்பை வலுப்படுத்த அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கத் தொடங்கியுள்ளன.

எனது சகோதரர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம், நாட்டு மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. இந்த நடைபயணம் நாட்டில் வெளிப்படையான தாக்கத்தையும் உருவாக்கி வருகிறது.

மதவெறி அரசியலை ராகுல் காந்தி தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வருகிறார். அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், சித்தாந்த ரீதியாகவும் பாஜவை ராகுல் காந்தி எதிர்த்து வருகிறார். அவரது இந்த குணங்கள், ஆளும் பாஜகவின் குறுகிய மனப்பான்மை கொண்ட அரசியலுக்கு சிறந்த மாற்று மருந்தாக அமைகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.