“தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி” – முதலமைச்சர் ஜோசப் விஜய்!

தேர்தலில் நம்மை நம்பிய மக்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவிக்க வேண்டியது நமது கடமை என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மனசாட்சி உள்ள மக்களாட்சி அமைத்துள்ள மக்கள் அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம், இன்று சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. மக்கள் நம்பிக்கை மூலம் அமைக்கப்பட்ட நமது அரசுக்கு ஆதரவு அளிக்கப்பட்டும் வாக்களிக்கப்பட்டும் நம்பிக்கைத் தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றிக்குக் காரணமான, நம்மை ஆதரிக்கும் மதிப்பிற்குரிய அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், அக்கட்சிகளைச் சேர்ந்த மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதே வேளையில், என்றும் நம்முடன் நிற்கும் நம் கழகச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நமது அன்பினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த வேளையில், தேர்தலில் நம்மை நம்பிய மக்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவிக்க வேண்டியது நமது கடமை. தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.