தீபாவளியன்று வெடிக்கப்படும் பட்டாசுகளால் மாசுபாடு ஏற்படுவதாகக் கூறி விமர்சிப்பவர்களுக்கு உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் தீபாவளிக் கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், விமர்சகர்களுக்கு எதிராகப் பல கருத்துகளை முன்வைத்துள்ளார்.
உ.பி. அரசால் தீபாவளி கொண்டாட்டங்களுக்கு எந்தவிதமான தடைகளும் விதிக்கப்படவில்லை என்றும், மக்கள் பண்டிகையை முழு மனதுடன் உற்சாகமாகக் கொண்டாட அரசு ஊக்கப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். பண்டிகையின் போது பட்டாசுகளால் எழும் மாசுபாடு காலப்போக்கில் மறைந்துவிடும் என்று குறிப்பிட்ட அவர், ஆனால் ஒட்டுமொத்த அரசியல் மற்றும் ஆட்சி முறையை ஊழல் மூலம் மாசுபடுத்தும் நபர்களைப் பற்றி யாரும் கேள்வி எழுப்புவதில்லை.
பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மாநிலத்தில் அனைத்துப் பண்டிகைகளின் போதும் கலவரங்கள் அரங்கேறியதாகவும், ஆனால் தற்போது சட்டம் ஒழுங்கு முழுமையாகப் பாதுகாக்கப்பட்டு மக்கள் அமைதியாகப் பண்டிகைகளைக் கொண்டாடி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.




