டாஸ்மாக் திறப்புக்கான அமைச்சர் செந்தில் பாலாஜியின் விளக்கம்

27 மாவட்டங்களில் கொரோனா நோய்த்தொற்று குறைந்த காரணத்தால்தான் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படுவதாக, அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், செய்தியாளர்களை சந்தித்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்…

27 மாவட்டங்களில் கொரோனா நோய்த்தொற்று குறைந்த காரணத்தால்தான் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படுவதாக, அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், செய்தியாளர்களை சந்தித்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தும் பாஜகவினர், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்வர்களா எனக் கேள்வி எழுப்பினார்.

அண்டை மாநிலமான கர்நாடகாவில், கொரோனா உச்சத்தில் இருந்தபோதும், டாஸ்மாக் மதுபானக் கடைகள் அடைக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.