முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

கொரோனாவை முழுமையாக தடுக்க, மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: ஜெ. ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்றை முழுமையாக தடுக்க, பொதுமக்கள் முழுஒத்துழைப்பு வழங்கவேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில், உள்ள கொரோனா தடுப்பூசி மையத்தை ஆய்வு மேற்கொண்ட அவர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

தமிழ்நாட்டில் நேற்று மட்டும், அதிகபட்ச எண்ணிக்கையாக 3 லட்சத்து 26 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு, தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் இதுவரை கருப்பு பூஞ்சை நோய்க்கு, ஆயிரத்து 348 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் கொரோனா இல்லாத 355 பேருக்கு, கருப்பு பூஞ்சை நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடுப்பூசி முகாம்களை ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளதாகவும், தடுப்பூசி மட்டும் நிரந்தர தீர்வு எனவும், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

தொடர் விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

Ezhilarasan

டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி!

Ezhilarasan

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது: ராகுல் காந்தி!