முக்கியச் செய்திகள் தமிழகம்

முதலமைச்சரின் அவசர உத்தரவு: “மிக மிக அவசரம் இயக்குனர் வரவேற்பு!

முதலமைச்சரின் சாலைப் பயணத்தின்போது பெண் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதற்கு வரவேற்பு தெரிவித்து ‘மிக மிக அவசரம்’ திரைப்பட இயக்குநர் சுரேஷ் காமாட்சி அறிக்கை.

சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பெண் காவலர்கள் எதிர்கொள்ளும் சிக்கல் குறித்து எடுக்கப்பட்ட படம் ‘மிக மிக அவசரம்’. இது குறித்து படத்தின் இயக்குனர் சுரேஷ் காமாட்சி கூறுகையில்,

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

“பெண் போலீசாரின் பெருந்துன்பங்களில் ஒன்று பிரபலங்கள் வரும்போது பாதுகாப்பிற்காக சாலைகளில் நிற்பது. அதிலென்ன இருக்கிறது என சாதாரணமாகக் கடந்து போகும்போது, ஒரு சின்ன சிக்கல் எவ்வளவு பெரிய வலியையும் அவஸ்தையையும் தருகிறது என்பதை “மிக மிக அவசரம்” படத்தில் சொல்லியிருந்தோம்.

ரொம்ப சின்ன கதைக் கருதான். ஆனால் அதன் பின்னிருந்த அழுத்தமான வலி பெரு வெற்றியைத் தந்தது.
திரையரங்கில் ஓடியதைவிட, இன்று இந்த அறிவிப்பால் உண்மையாகவே பெருமைகொள்கிறேன். மகிழ்கிறேன்.

பெண்போலீசார் சாலையோர பாதுகாப்பில் ஈடுபட வேண்டாம் என அறிவித்திருக்கும் தமிழக முதல்வர் மாண்புமிகு திரு. ஸ்டாலின்-க்கும், மரியாதைக்குரிய டிஜிபி -க்கும் மனமுவந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படைப்பிற்கு கதை எழுதிய இயக்குநர் ஜெகன்னாத், நடித்த பிரியங்கா, அரீஷ் குமார், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் , இயக்குநர் சீமான், இயக்குநர் சேரன், மற்றும் படத்தை வெளியிட்ட #லிப்ரா ரவீந்தர் சந்திர சேகரன், இணைந்து தயாரித்த #குங்ஃபூஆறுமுகம், ஒளிப்பதிவாளர் பாலபரணி, எடிட்டர் சுதர்சன், இசையமைப்பாளர் இஷான் தேவ், பி ஆர் ஓ A. ஜான் அனைவருக்கும் நன்றிகள்.

படைப்பு என்பது பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல, அதைத் தாண்டி சமூகத்தில் என்ன மாற்றத்தை உருவாக்குகிறது என்பது மிக முக்கியம். அந்த வகையில் “மிகமிக அவசரம்” படம் எடுத்தற்காக உண்மையாகவே பெருமை கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: டிராக்டரில் வந்தார் ராகுல்காந்தி

Gayathri Venkatesan

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய ஆலோசனை

EZHILARASAN D

டாஸ்மாக் கடை மேலாளரை தாக்கி 7.8 லட்சம் கொள்ளை!

Saravana