பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இலங்கை கடற்படையால் கைது செய்ய பட்ட 16 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை கடற்படையினர் அவ்வப்போது எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை கைது செய்து வருகின்றனர். மேலும் தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்து கொள்கின்றனர். நீண்ட நாட்களாக இதே வேலையில் ஈடுபட்டு வரும் இலங்கை கடற்படைக்கு தொடர்ந்து பலர் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு இருக்கின்றனர்.
இதையும் படியுங்கள்: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு நாளை தொடக்கம்!
இந்நிலையில், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த 16 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களின் 2 மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்ககோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடித்ததில், தமிழ்நாடு மற்றும் தமிழக மீனவர்களின் நலனுக்காக வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த கவனம் கொண்டுள்ளனர். இந்தியா-இலங்கை நாடுகளுக்கு இடையேயான உறவு மற்றும் மீனவர்களின் பாதுகாப்பு ஆகியவற்றில் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்ககைகள் மத்திய அரசு எடுத்து வருகிறது.
புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த 16 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். மேலும் இரண்டு மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனடி நடவடிக்க எடுக்க வேண்டும் என கடித்ததில் தெரிவித்துள்ளார்.







