வந்து விட்டது கோடைகாலம்..! நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை!

கோடைகாலம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது வாட்டி வதைக்கும் கடுமையான வெயில் தான். அதிலும் மக்கள்தொகை நிறைந்து எப்போதும் பரபரப்பாக சாலைகளில் இயங்கிக் கொண்டிருக்கும் பொதுமக்கள் நிறைந்த இந்த சென்னை மாநகரில் கோடை காலத்தின்…

கோடைகாலம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது வாட்டி வதைக்கும் கடுமையான வெயில் தான். அதிலும் மக்கள்தொகை நிறைந்து எப்போதும் பரபரப்பாக சாலைகளில் இயங்கிக் கொண்டிருக்கும் பொதுமக்கள் நிறைந்த இந்த சென்னை மாநகரில் கோடை காலத்தின் தாக்கம் ஆக்ரோஷமாய் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

சூரியனின் தாக்கத்தால் எழும் வெப்பம் ஒரு புறம் அதிகப்படியான வாகனங்கள்
ஓய்வின்றி தொடர்ச்சியாக சாலைகளில் இயங்கிக் கொண்டிருப்பதால் ஏற்படும் வெப்பம்
மறுபுறமும் சேர்ந்து சென்னையை வெப்பத்தில் மிதக்க வைக்கும் என்றுதான் சொல்ல
வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மே மாதங்களில் கோடைகாலத்தின் தாக்கம் இருக்கும். குளிர்சாதனங்கள் நிறைந்த இடத்தில் இருந்தால் கூட அதன் தாக்கம் தெரியும்.

இந்த கோடை காலத்தை சமாளிக்க ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க
வேண்டும். அதுமட்டுமின்றி நீர் சத்துள்ள காய்கறிகளையும் உணவில் அதிகம்
சேர்த்துக் கொள்ள வேண்டும். பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இருமல்
இருந்தால் மட்டும் இந்த பழங்களை தவிர்த்து காய்கறிகளை எடுத்துக் கொள்ளலாம்
உள்ளிட்ட அறிவுரைகளை தான் மருத்துவர்கள் தொடர்ச்சியாக வழங்குகின்றனர். அதிலும் குறிப்பாக தண்ணீர் பழத்தில் நீர் சத்து அதிகம் என்பதால் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தண்ணீர் ,பழம் எடுத்துக் கொள்ளலாம்.

பொதுவாகவே அந்த காலகட்டத்தில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகளை எடுத்துக்
கொள்வது உடலுக்கு நல்லது. குறிப்பாக வெயில் காலங்களில் தண்ணீர் ,பழத்தை தேடி
விரும்பி உண்ணாதவர்கள் இருக்க முடியாது. வெயிலின் தாக்கம் அதிகரிப்பதற்கு முன்பே தண்ணீர் பழங்களை விற்பனை செய்யும் கடைகள் சென்னையின் முக்கிய சாலைகளில் நிறைய தொடங்கி விட்டன.

பழங்கள் விற்பனை செய்பவர்களும் நூற்றுக்கணக்கில் தண்ணீர் பழங்களை வாங்கி வந்து முழு பழமாக வாங்கி சென்று வீட்டில் குடும்பத்துடன் சாப்பிடுபவர்களுக்கு எடை
போட்டு விற்பனை செய்தும். சாலைகளில் பயணிக்கும் போது வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் பழ கடைகளை தேடி வருபவர்களுக்கு ஏற்றது போல பழத் துண்டுகளாக வெட்டிக் கொடுத்தும், ஜூஸாக குடிக்க விரும்புபவர்களுக்கு அப்படியும் என விற்பனை செய்து வருகின்றனர்.

விலை கூடுதலாக இருந்தாலும் கோடை கால தாக்கம் அதிகரிப்பதற்கு ஏற்ப விலை கூடவும்
செய்யலாம், குறையவும் செய்யலாம். ஒரு பழம் ஒரு வாரத்திற்கு மேல் தாங்காது ,
குளிர்சாதன பெட்டிகளில் வைத்து சாப்பிடுவது கெடுதலாக இருக்கும். வாங்கி
வெட்டியதும் சாப்பிட வேண்டும்.

சாலைகளில் வெளியிலே வெட்டி வைத்திருக்கும் பழங்கள் கவர்ச்சிக்கு மட்டுமே தவிர
அதை விற்பனை செய்ய மாட்டோம். சுத்தமாக தூசி படாமல் பாதுகாப்பாக கண்ணாடி
பெட்டிகளில் இருக்கும் பழங்களை தான் விற்பனை செய்வோம் இதனால் எந்த பாதிப்பும்
ஏற்படாது என்று சாலை ஓரங்களில் தண்ணீர் பழம் விற்பனை செய்யும் கடைகாரர்கள்
தெரிவிக்கின்றனர். எனவே சுட்டெரிக்கும் கோடை காலத்தை சமாளிக்க தண்ணீர் பழங்களை தேவையான அளவுக்கு எடுத்துக் கொள்வது நம் உடலுக்கு நல்லது.

  • ரேவதி, நியூஸ் 7 தமிழ்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.