ஜப்பானில் ஒரு உள்ளூர் கடற்கரையில் மர்மமான ஒரு பெரிய இரும்பு பந்து கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
கடற்கரையில் ஒதுங்கிய மர்மப்பொருள் காவல்துறை மற்றும் உள்ளூர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இது வெடிக்க வாய்ப்பில்லை என்க் கூறப்பட்டாளும் என்னவென்று தெரியாமல் அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.
இந்த வினோத நிகழ்வு, டோக்கியோவிலிருந்து 155 மைல் தொலைவில் உள்ள தெற்கு கடற்கரை நகரமான ஹமாமட்சுவில் நடந்துள்ளது. கடற்கரைக்குச் சென்ற ஒருவரால் பார்க்கப்பட்ட சுமார் 1.5 மீட்டர் விட்டம் கொண்ட ராட்சத உருண்டையை அவர் பார்த்ததும் காவல்துறைக்குப் புகார் அளித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து அங்கு வந்த காவல் துறையினரும், வல்லுநர்கள் எக்ஸ்ரே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொருளின் உட்புறத்தை ஆராய்ந்து, அது வெற்று பகுதியாக இருப்பதைக் கண்டறிந்தனர்.
அண்மை செய்திகள்: பிரம்மாண்ட மலைப்பாம்பை கூலாக தூக்கிய பெண்; இணையத்தில் வைரலாகும் வீடியோ!
மேலும், காவல்துறை அதிகாரிகள் வெடிகுண்டு நிபுணர்களை விசாரணைக்கு அழைத்தனர். ஆனால் அது என்ன, எங்கிருந்து வந்தது என்பதை அதிகாரிகள் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருவதாக கூறப்படுகிறது. ஜப்பானிய தற்காப்புப் படை மற்றும் கடலோரக் காவல்படையால் எடுக்கப்பட இந்த மர்ம உருண்டையின் புகைப்படங்கள் இணையத்தில் வரலாகி வருகிறது.







