தொடக்க பள்ளி சத்துணவு தரத்தை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்த ஆட்சியர்!

அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் உள்ள தொடக்கப் பள்ளியில் சத்துணவு தரத்தை சாப்பிட்டு பார்த்து  ஆட்சியர் ஆய்வு செய்தார்.  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளர்…

அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் உள்ள தொடக்கப் பள்ளியில் சத்துணவு தரத்தை சாப்பிட்டு பார்த்து  ஆட்சியர் ஆய்வு செய்தார். 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் ஒன்றியத்தில் நடைபெறும்
வளர்ச்சி பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா மற்றும் அரியலூர் ஆட்சியர் ரமண சரஸ்வதி ஆகியோர் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தா.பழூர் அரசு மருத்துவமனை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

அதைத்தொடர்ந்து, சீனிவாசபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய
தொடக்கப் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தினை அவர்கள் ஆய்வு செய்தனர்.
அப்போது, அங்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறித்தும்,
மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு சரியாக வழங்கப்படுகிறதா என்பது
குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி மாணவர்களுக்கு வழங்கப்படும்
உணவின் தரத்தை அறிவதற்காக சாப்பிட்டு ஆய்வு செய்து அதற்கான தரத்தை கூடுதல்
தலைமை செயலாளரிடம் தெரிவித்தார். மேலும், பள்ளி கட்டடங்கள் பழுதாக இருப்பதால் புதிதாக கட்டப்படும் கட்டடப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு கூடுதல் தலைமைச் செயலாளர் அலுவலர்களுக்கு அவர் உத்தரவு பிறப்பித்தார்.

அதனைத் தொடர்ந்து அணைக்குடம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசேகரன், விஸ்வநாதன், ஜெயங்கொண்டம் தாசில்தார் துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.