உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா விலகல்!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா விலகுவதாக அறிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி கடந்த செவ்வாய் கிழமை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இந்தப் போட்டியின்போது…

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா விலகுவதாக அறிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி கடந்த செவ்வாய் கிழமை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இந்தப் போட்டியின்போது இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகாவுக்கு வலது தொடையில் காயம் ஏற்பட்டது. கடந்த அக்.5ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டியில் இலங்கை விளையாடிய முதல் 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் 32 வயதான இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவுடம் இலங்கை மோசமாக தோல்வியுற்றது. ஷனகாவின் கேப்டன்சி கேள்விக்குறியானது. இந்நிலையில் அவருக்குப் பதிலாக சமீகா கருணா ரத்னா அணியில் இடம்பெற்றுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கை அணியின் கேப்டனாக குசால் மெண்டிஸ் செயல்படுவாரென இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

https://twitter.com/OfficialSLC/status/1713205641932849250

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.