பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமிற்கு விராட் கோலி வழங்கிய பரிசு!

நடப்பு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து பாக். வீரர் பாபர் அசாமுக்கு இந்திய வீரர் விராட் கோலி தனது கையெழுத்திட்ட டி-சர்ட்டை பரிசாக வழங்கியுள்ளார். உலகக்கோப்பை…

நடப்பு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து பாக். வீரர் பாபர் அசாமுக்கு இந்திய வீரர் விராட் கோலி தனது கையெழுத்திட்ட டி-சர்ட்டை பரிசாக வழங்கியுள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. டாஸை வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் 191 ரன்கள் மட்டும் எடுத்து ஆல்அவுட் ஆனது.

தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா, 30.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 86 ரன்களும், ஸ்ரேயாஸ் ஆட்டமிழக்கமால் 53 ரன்களும் அடித்தனர்.. உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய அணி 8-வது முறையாக பாகிஸ்தானை வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.இந்தப் போட்டி முடிந்த நிலையில் மைதானத்தில் விராட் கோலி மற்றும் பாபர் அசாம் சந்தித்துக் கொண்டனர். அப்போது விராட் கோலி தனது கையெழுத்திட்ட டி-சர்ட்டை பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாமுக்கு அன்பு பரிசாக வழங்கினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே பாகிஸ்தான் வீரர்கள் சிலருக்கு இந்திய வீரர் விராட் கோலி அவர் பயன்படுத்திய பேட், கையுறை, ஜெர்சி உள்ளிட்டவற்றை வழங்கிய நிலையில், தற்போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமுக்கும் பரிசு வழங்கி அவரை கௌரவப்படுத்தியது கிரிக்கெட் ரசிகர்களிடையே வரவேற்பினைப் பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.