நவராத்திரி பண்டிகைக்காக பிரதமர் மோடி எழுதிய பாடல் – இணையத்தில் வைரல்!

நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி குஜராத்தி மொழியில் எழுதிய ‘கர்பா’ பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.   நவராத்திரி பண்டிகை தொடங்கவுள்ள சூழலில் நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மையைக் எடுத்துக்கூறும் விதமாக பிரதமர் மோடி…

நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி குஜராத்தி மொழியில் எழுதிய ‘கர்பா’ பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.  

நவராத்திரி பண்டிகை தொடங்கவுள்ள சூழலில் நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மையைக் எடுத்துக்கூறும் விதமாக பிரதமர் மோடி பாடல் ஒன்றை எழுதியுள்ளார். இந்தப் பாடலை பிரபல பாலிவுட் பாடகி த்வனி பனுஷாலி பாடியிருக்கிறார். தனிஷ்க் பாச்சி இசையமைத்துள்ளார். இயக்குனர் நதீம் ஷா இந்த பாடலை இயக்கி இருக்கிறார்.

இந்த பாடல் யூடியூபில் வெளியிடப்பட்டது. வெளியான உடனேயே பலரும் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிரத் தொடங்கினர். இதனால், இந்த வீடியோவின் வியூஸ் சில மணி நேரங்களில் 20 லட்சத்தைத் தாண்டிவிட்டது. பிரதமர் மோடியுடன் பணி யாற்றியது குறித்து இப்பாடலின் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி கூறும்போது, ‘‘பிரதமர் நரேந்திர மோடியுடன் பணியாற்றியது எனக்கு பெருமை. இந்தப் பாடல் அருமையாக வந்துள்ளது. அனைவருக்கும் பிடித்த வகையில் பாடல் அமைந்துள்ளது” என்றார்.

https://twitter.com/narendramodi/status/1713405211027599851

இந்த வீடியோ பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “மங்களகரமான நவராத்திரி நெருங்கும் நிலையில், கடந்த ஒரு வாரத்தில் நான் எழுதிய கர்பாவைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பண்டிகைக்கால பாடல் அனைவரையும் அரவணைக்கட்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார். பாடல் வெளியான 5 மணி நேரத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தப் பாடலைப் பார்த்து ரசித்துள்ளனர். மேலும் ஏராளமானோர் இந்தப் பாடலை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.