சாத்தாயி அம்மன் கோயிலில் அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண நலம்பெற வேண்டி சிறப்பு அபிஷேகம்!

குளித்தலை அருகே உள்ள நங்கவரம் அருள்மிகு சாத்தாயி அம்மன் கோயிலில் அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண நலம் பெற வேண்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட…

குளித்தலை அருகே உள்ள நங்கவரம் அருள்மிகு சாத்தாயி அம்மன் கோயிலில் அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண நலம் பெற வேண்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 21ம் தேதிபைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜி நலமுடன் இருப்பதாகவும் அறுவை சிகிச்சை வார்டிலிருந்து  சாதரண வார்டுக்கு அவர் மாற்றப்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் செந்தில் பாலாஜி பூரண குணமடைய வேண்டி அவரது தொண்டர்கள் சிறப்பு பூஜைகள் நடத்தினர். அந்த வகையில், கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள நங்கவரம் அருள்மிகு சாத்தாயி அம்மன் கோயிலில் அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண நலம் பெற  வேண்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் இரா. மாணிக்கம் தலைமை வகித்து, நங்கவரம் நகர தி.மு.க செயலாளர் முத்து (எ) சுப்பிரமணி முன்னிலை வகித்ததோடு, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி தியாகராஜன், குளித்தலை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சந்திரன், குளித்தலை மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் பொய்யாமணி தியாகராஜன், மற்றும் தி.மு.க முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.