ஸ்ரீ வனதுர்க்கை அம்மன் கோயில் குடமுழுக்கு : திரளாக கலந்துகொண்ட பக்தர்கள்..!

வேதாரண்யம் அருகே தோப்புத்துறை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வனதுர்க்கை  அம்மன் கோயிலில் நடைபெற்ற  குடமுழுக்கு விழாவில்  ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வனத்துர்க்கை அம்மன்…

வேதாரண்யம் அருகே தோப்புத்துறை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வனதுர்க்கை  அம்மன் கோயிலில் நடைபெற்ற  குடமுழுக்கு விழாவில்  ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வனத்துர்க்கை அம்மன் கோயில் பழமை வாய்ந்த ஒன்றாகும். இந்த கோயில் புனரமைக்கப்பட்டு  கடந்த 22 ஆம் தேதி கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜை தொடங்கியது.

இதைத்தொடர்ந்து, இன்று காலை 6 ஆம் யாகசாலை பூஜைகள் முடித்து, கோயிலைச் சுற்றி சிவாச்சாரியார்கள் கடங்களை மங்கள வாத்தியங்கள்  முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்று, கோயிலின் ராஜகோபுரம் மற்றும் விமான கோபுரங்களில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

-சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.