“பேரவையில் சபாநாயகர் அப்பாவு திமுக உறுப்பினரை விட மோசமாக நடந்துகொண்டார்!” – அண்ணாமலை

சபாநாயகருக்கு கட்சி சார்ந்து பேச உரிமையில்லை ஆனால் அப்பாவு திமுக உறுப்பினரை விட மோசமாக நடந்து கொண்டார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.  சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக…

சபாநாயகருக்கு கட்சி சார்ந்து பேச உரிமையில்லை ஆனால் அப்பாவு திமுக உறுப்பினரை விட மோசமாக நடந்து கொண்டார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். 

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக நாடாளுமன்ற தேர்தல் அலுவலகத்தை கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று திறந்து வைத்தார்.  இந் நிகழ்ச்சியில் பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் மற்றும் பால்.கனகராஜ் உள்ளிட்ட பாஜக முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாவது:

வடசென்னை நாடாளுமன்ற தேர்தல் அலுவலகத்தை இன்று திறந்திருக்கிறோம். சென்னையின் ஆதி குடிமக்கள் வாழக்கூடிய பகுதியாக வடசென்னை திகழ்கிறது.  இந்த முறை வடசென்னையை பாஜக கைப்பற்றும்.

சபாநாயகர் அப்பாவு திமுகவை விட மோசமாக நடந்துகொண்டார்.  சபாநாயகருக்கு கட்சி
சார்ந்து பேச உரிமையில்லை.  ஆளுநருக்காக எழுதி கொடுத்த உரையில் 10 பொய்களை
சுட்டி காட்டி உள்ளோம். சென்னை வெள்ளத்தில் திமுகவின் செயல் குறித்து ஆளுநர்
பாராட்ட வேண்டுமென்றால் எப்படி பாராட்டுவார்?

ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டதற்கு பின்பு தான் தமிழகத்தின் வரி வளர்ச்சி
அதிகரிக்கப்பட்டுள்ளது.  கோட்சேவுக்கும் அப்பாவுக்கும் தொடர்பு இருக்கலாம்.  ஆனால் ஆளுநருக்கும் கோட்சேவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

சபாநாயகரான அப்பாவு திமுக உறுப்பினர் போல் சட்டமன்றத்தில் நடந்து கொண்டார். சபாநாயகர் அப்பாவு மகனுக்கு தேர்தலில் MP சீட் கேட்பது போல நேற்று சட்டசபையில் சபாநாயகர் உரை இருந்தது.  சட்டசபையில் தமிழ் தாய்வாழ்த்து முழுமையாக வாசிக்க வேண்டும்.  குறிப்பாக அது கருணாநிதியால் வெட்டப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தை போல் இசைக்கக் கூடாது.

உயர் நீதிமன்றம் இரண்டு முறை ஊழலினால் கைது செய்யப்பட்ட அமைச்சருக்கு சம்பளம்
கொடுக்க வேண்டாம் என சொல்லி இருந்தனர். செந்தில்பாலாஜி ஊழல்வாதி என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதனால், செந்தில் பாலாஜி பதவி ராஜினாமா செய்ததை வைத்துக்கொண்டு ஜாமின் தரக்கூடாது.

இவ்வாறு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.