பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,
“பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவர் நபின் நிதின் நாளை தமிழ் நாடு வருகிறார். தமிழ் நாட்டில் அவர் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். நாளை மறுதினம் மருதமலை கோவிலுக்கும், பேரூர் ஆதீனத்துக்கும் செல்கிறார்.
தொகுதி பங்கீடு குறித்து அதிமுகவுடன் இதுவரை பேசவில்லை. எங்கு போட்டியிடப் போகிறோம் என்பது குறித்து கூட்டணி தலைவருடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.
ஜனநாயகன் பட விவகாரத்திற்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. சென்சார் போர்டு சில விதிமுறைகளை சொல்லியிருக்கிறது. சில காட்சிகளை காட்டலாம். சில காட்சிகளை காட்டக்கூடாது என இருக்கிறது. படத்தை முழுமையாக பார்த்தால் தான் தெரியும். சென்சார் போர்டு உறுப்பினர்கள் படத்தை பார்த்து கருத்து சொல்லி இருக்கிறார்கள். அது சரியா ? தவறா? என்ற விவகாரத்திற்கு நாங்கள் போகவில்லை. பாஜக விற்கும் அதற்கும் எந்த தொடர்பும் கிடையாது. அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்றவை தன்னிச்சையான ஆணையங்களாகும். காங்கிரஸ் கட்சி விஜயின் பக்கம் போய்க் கொண்டு இருக்கிறார்கள்.
பாஜக கூட்டணிக்கு தேமுதிக வரும் என எதிர்பார்க்கிறோம். முடிவு அவர்கள் கையில்.
திமுகவினர் 532 பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தார்கள். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவதாக சொன்னார்கள். ஆட்சிக்கு வந்த ஐந்தாண்டுகளில் எதையும் நிறைவேற்றவில்லை. ராமதாஸ் திமுக பக்கம் சாய்கின்றாரா..? என அவரிடம் தான் கேட்க வேண்டும். விஜய் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்தால் அசைக்க முடியாத சக்தியாக இருப்பார் என தமிழிசை பேசியிருப்பது அவருடைய சொந்த கருத்து.
அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. கட்சியில் யாரை சேர்க்க வேண்டும், வேண்டாம் என அவர்தான் முடிவு செய்வார். அமித்ஷா, டிடிவி தினகரனை சந்தித்தாரா என்பது எனக்கு தெரியாது. பாஜகவிற்கு யாரையும் அடிபணியை வைக்க வேண்டிய தேவை இல்லை” என்று தெரிவித்தார்.







