முக்கியச் செய்திகள்மழைதமிழகம்செய்திகள்வானிலை

தெற்கு அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி: டிச.3-ம் தேதி புயலாக மாறும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தெற்கு அந்தமான் அருகே நிலவும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி, டிசம்பர் 3-ம் தேதி புயலாக மாறும் எனவும், டிச. 4-ம் தேதி சூறாவளி புயலாக மாறும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

“தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (டிச. 1) 5:30 மணி அளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நீடிக்கிறது. அதனைத்தொடர்ந்து, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். 

மேலும், மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்தால், அது படிப்படியாக தீவிரமடைந்து, டிச. 3-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் ஒரு சூறாவளி புயலாக மாறும். அதன்பிறகு, இது வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை அருகே டிசம்பர் 04-ம் தேதி அதிகாலை சூறாவளி புயலாக அடையும்.” இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 1300 ஆக உயர்வு

Web Editor

கோடை வெயிலில் தண்ணீர் இன்றி தவிக்கும் ஆதரவற்ற நாய்கள்.. 7 ஆண்டுகளாக தண்ணீர் விநியோகம் செய்யும் நல் உள்ளங்கள்..

Web Editor

7 ஆஸ்கர் விருதுகளை குவித்த ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ திரைப்படம்!

Jayasheeba

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading