2023 ல் அதிக வசூலை குவித்த இந்திய திரைப்படங்களின் பட்டியலை IMDB இணையதளம் வெளியிட்டுள்ளது.
உலக அளவில் திரைப்படங்கள், மற்றும் வெப் தொடர்களுக்கான மதிப்பீடுகளை நிர்ணயிக்கும் ஐஎம்டிபி இணையதளம் ஒவ்வொரு ஆண்டும் டாப் 10 படங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி, 2023-ம் ஆண்டில் வெளியாகி உலக அளவில் கவனம் ஈர்த்த மற்றும் அதிக வசூலை குவித்த இந்திய திரைப்படங்களின் பட்டியலை ஐஎம்டிபி வெளியிட்டிருந்தது.
இதில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான ‘ஜவான்’ முதலிடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் லியோ மற்றும் ஜெயிலர் திரைப்படங்கள் முறையே 4வது மற்றும் 5வது இடங்களை பிடித்துள்ளன.
2023- ம் ஆண்டில் அதிக வசூலை குவித்த இந்திய திரைப்படங்கள் :
- ஜவான் – ரூ.1,150 கோடி
- பதான் – ரூ.1,050 கோடி
- கதர் 2 – ரூ.690 கோடி
- லியோ – ரூ.610 கோடி
- ஜெயிலர் – ரூ.605 கோடி
- ஆதிபுருஷ் – ரூ.410 கோடி
- டைகர் 3 – ரூ.400 கோடி
- ராக்கி ஆர் ராணி கி பிரேம் கஹானி – ரூ.355 கோடி
- பொன்னியின் செல்வன் 2 – ரூ.343 கோடி
- வாரிசு – ரூ.302 கோடி







