தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமாவுக்கு காயம்!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், விராட் கோலி அடித்த பந்தை தடுக்க முயன்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமாவுக்கு காயம் ஏற்பட்டது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி 3 டி20,…

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், விராட் கோலி அடித்த பந்தை தடுக்க முயன்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமாவுக்கு காயம் ஏற்பட்டது.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்தது. இதில் டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் முடிவடைந்த நிலையில், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இந்நிலையில், இன்று இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனைத் தொடர்ந்து இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் விளையாடியது. போட்டியின் போது விராட் கோலி அடித்த பந்தை தடுக்க முயன்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமாவுக்கு காயம் ஏற்பட்டது. உடனே, அணியின் மருத்துவர் உதவியுடன் அவர் பெவிலியன் திரும்பினார்.

இதுகுறித்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தரப்பில் கூறியிருப்பதாவது:

கேப்டன் டெம்பா பவுமாவை ஸ்கேன் செய்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு  மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளபட உள்ளன. டெம்பா பவுமா அணியில் இல்லாதபோது அவருக்கு பதிலாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டீன் எல்கர் அணியை வழிநடத்துவார் என தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.