முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சசிகலா, டி.டி.வி , ஓ.பி.எஸ். நன்றி கெட்டவர்கள்: ஜெயக்குமார் ஆவேசம்

இரட்டை இல்லை சின்னத்திற்கு மவுசு குறைந்துவிட்டதாக சொல்வது சரி இல்லை என்றும், சசிகலா, டி.டி.வி , ஓ.பி.எஸ் ஆகியோர் நன்றி கெட்டவர்கள் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி வேட்பளார் மேனகா, தேமுதிக வேட்பளார் ஆனந்த் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று நேரில் சந்தித்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சி தேர்தல் விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என்று புகார் மனு அளித்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஈரோடு கிழக்கு  தொகுதி சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தல் நடக்க உள்ள சூழ்நிலையில் ஆளும் திமுக அரசு ஜனநாயக அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது.

நேற்று, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு யாரும் செல்ல கூடாது என்பதற்காக அதை தடுக்க பல இடங்களில் திமுகவை சேர்ந்த சிலர் , சட்டவிரோதமாக பந்தல்கள் அமைத்து 1000 ரூபாய் பணம், உணவு கொடுக்கும் நிகழ்வுகள் எல்லாம் அரங்கேறியது. இது திருமங்கலம் பார்முலாவை மிஞ்சும் அளவுக்கு உள்ளது.

திமுக ஜனநாயகத்தை மதிக்காமல் செயல்பட்டு வருகிறது. முதலமைச்சர் மற்றும் அவரது மகன் தவிர மற்ற ஆளும் திமுக அமைச்சர்கள் 30 பேரும் ஈரோட்டில் தான் முகாமிட்டு உள்ளனர். எது எப்படி இருந்தாலும் ஈரோடு கிழக்கில் அதிமுக வேட்பாளர் தான் மகத்தான வெற்றி பெறுவார். நிச்சயம் திமுக கூட்டணி ஜெயிக்காது என ஜெயக்குமார் தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் கலந்து கொள்ளாதது ஏன் எனற கேள்விக்கு பதிலளித்த அவர், ஏற்கனவே, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயணம் என்பதால் அவர் இலங்கைக்கு சென்றுள்ளார். ஆனால் பாஜக சார்பில் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார் என்றும் எங்களது கூட்டணியில் எந்த விதமான பிரச்னையும் இல்லை என்றும் கூறினார்.

இதையடுத்தது இரட்டை இலை சின்னம் குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய ஜெயக்குமார், இரட்டை இல்லை சின்னம் மவுசு குறைந்தது என்று சொல்வது சரி அல்ல. டி டி வி. தினகரன் ஒரு நன்றி கெட்டவர். சசிகலா, டி டி வி தினகரன், ஓ பி எஸ் ஆகியோரை புரட்சி தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது என்று கட்டமாக விமர்சித்தார்.

மேலும் திமுகவின் வாக்குறுதிகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பொய் சொல்வதற்கு அளவு உள்ளது. தேர்தல் வாக்குறுதியை 85% நிறைவேற்றியதாக முதலமைச்சர் சொல்கிறார். ஆனால் கல்விக் கடனை ரத்து செய்தார்களா? , நீட் தேர்வை ரத்து செய்தீர்களா?, பயிர் சேதம் குறித்து என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் என்று குற்றம் சாட்டிய ஜெயக்குமார், தொடர்ந்து, ஜனநாயக அமைப்பில் புகார் கொடுப்பது என்பது அடிப்படையான உரிமை. நாங்கள் சொல்வதை சொல்லிவிட்டோம் தேர்தல் கமிஷனுக்கு மேல் நீதிமன்றம் என்ற ஒன்று உள்ளது . அங்கு சென்று பார்த்துக்கொள்வோம் என்றார்.

திரைப்படங்கள் போல தமிழ்நாட்டில் காவல்துறையினர் கொல்லப்படுவது சாதாரணமாக  நடந்து வருகிறது. எங்கள் ஆட்சியில் காவல் துறை என்றால் மிடுக்கு இருக்கும். இன்று அப்படி இல்லை யார் அடிக்க போகிறார்கள் என்பது போல் உள்ளது. தர்ம அடி வாங்கும் காவல் துறையாக உள்ளது என்று ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

‘கடல்’ நாயகனை காதலில் மூழ்கடித்த மஞ்சிமா மோகன்!

EZHILARASAN D

இருசக்கர வாகனத்தில் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பு: 15 நிமிடம் போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்!

Web Editor

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: விவிபேட் எந்திரம் பயன்படுத்த உத்தரவு

Web Editor