சங்கரன்கோவிலில் ஒருவர் வெட்டி படுகொலை – காவல்துறையினர் விசாரணை!

சங்கரன்கோவிலில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கலவத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் ராமசாமியாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜோதி முருகன் என்பவர் ரயில்வே பீடர் சாலையில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்களால் இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் ஜோதி முருகன் உடலை மீட்டு நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து ஜோதி முருகன் படுகொலை செய்யப்பட்டது குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் குறித்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் நேரில் விசாரணை மேற்கொண்டார். ரயில்வே பீடர் சாலையில் இரவு நடந்த படுகொலை சம்பவம் சங்கரன் கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.