மணிப்பூர் பொதுத்துறை வங்கியில் துப்பாக்கிமுனையில் ரூ.18.80 கோடி கொள்ளை!

மணிப்பூரில் உள்ள பொதுத்துறை வங்கியில் துப்பாக்கிமுனையில் ரூ.18.80 கோடி மதிப்பிலான பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் நகரிலிருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள உக்ருல் மாவட்டத்தில் பஞ்சாப்…

மணிப்பூரில் உள்ள பொதுத்துறை வங்கியில் துப்பாக்கிமுனையில் ரூ.18.80 கோடி மதிப்பிலான பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் நகரிலிருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள உக்ருல் மாவட்டத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை ஒன்று உள்ளது.  இந்த வங்கியில் நேற்று மாலை (நவ.30) 5.40 மணியளவில் சுமார் 10 பேர் அடங்கிய கொள்ளை கும்பல் ஒன்று ஆயுதங்களோடு,  முகத்தைத் துணியால் மூடிக்கொண்டு வங்கிக்குள் புகுந்தனர்.

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாவலர்களைத் தாக்கி உள்ளே நுழைந்த அந்த கொள்ளை கும்பல்,  ஊழியர்களைத் துப்பாக்கி முனையில் சிறை பிடித்தனர்.  வங்கியின் மேலாளாரை பண லாக்கரை திறக்கச் செய்து,  அதிலிருந்த ரூ.18.80 கோடி பணத்தை இந்த கும்பல் கொள்ளையடித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக உக்ருல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.  மேலும் கொள்ளை சம்பவம் முழுவதும் வங்கியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதும் தெரிய வந்துள்ளது.  இந்நிலையில் சிசிடிவி ஆதாரங்களை வைத்து கொள்ளையர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.