“ராஜசேகர் மாரடைப்பு காரணமாகத் தான் உயிரிழந்துள்ளார்”

ராஜசேகர் மாரடைப்பு காரணமாகத் தான் உயிரிழந்துள்ளார், எந்த உள்காயம் மற்றும் வெளிக்காயம் இல்லை எனப் பிரேதப் பரிசோதனையில் மருத்துவர்கள் தன்னிடம் தெரிவித்தாக மேஜிஸ்திரேட் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக விசாரணை கைதி மரணம் என்பது…

ராஜசேகர் மாரடைப்பு காரணமாகத் தான் உயிரிழந்துள்ளார், எந்த உள்காயம் மற்றும் வெளிக்காயம் இல்லை எனப் பிரேதப் பரிசோதனையில் மருத்துவர்கள் தன்னிடம் தெரிவித்தாக மேஜிஸ்திரேட் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக விசாரணை கைதி மரணம் என்பது நிகழ்ந்து வருகிறது. சமீபத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும், பேசு பொருளாகவும் மாறியது. அந்த சுவடு அழிவதற்கு முன்பாக மீண்டும் ஒருவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், உடல் நிலை பாதித்து உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில், இன்று நாகப்பட்டினம் மாவட்ட சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த நாகூரைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில், விசாரணை கைதி ராஜசேகர் என்பவர் மர்ம மான முறையில் உயிரிழந்தார். குற்ற வழக்கில் ராஜசேகரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் கொடுங்கையூர் காவல் நிலைய போலீசாரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

அண்மைச் செய்தி: ‘அறிமுகமானது சூரிய சக்தியால் இயங்கும் கார்’

ராஜசேகரன் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாகவும், உடனே அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகத் தகவல் வெளியானது. அதனைத்தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

https://twitter.com/news7tamil/status/1536370048994246657

இந்நிலையில், விசாரணை கைதி ராஜசேகர் மரணம் தொடர்பாகத் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ள மாநில மனித உரிமை ஆணையம், சென்னை மாநகர காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்தச்சூழ்நிலையில், ராஜசேகர் மாரடைப்பு காரணமாகத் தான் உயிரிழந்துள்ளார், எந்த உள்காயம் மற்றும் வெளிக்காயம் இல்லை எனப் பிரேதப் பரிசோதனையில் மருத்துவர்கள் தன்னிடம் தெரிவித்தாக மேஜிஸ்திரேட் ராஜசேகர் குடும்பத்தாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.