முக்கியச் செய்திகள் தமிழகம்

கும்பகோணம் இரட்டை கொலை; இருவர் கைது

கும்பகோணம் அருகே நிகழ்ந்த இரட்டை கொலை தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களிடம் விசாரணை நடைபெறுவதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியிலுள்ள சோழவரத்தைச் சேர்ந்தவர் மோகன். இவர் கடந்த சில ஆண்டுகளாக வேறு ஜாதியை சேர்ந்த சரண்யா என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் சரண்யா வீட்டில் மோகன் பெண் கேட்ட போது அவரது ஜாதியை குறிப்பிட்டு பெண் தர சரண்யா வீட்டில் மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து காதல் ஜோடிகளாக சரண்யா மற்றும் மோகன் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்துள்ளனர். சரண்யாவை தனது மைத்துனர் ரஞ்சித்துக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என சக்திவேலு நினைத்திருந்த நிலையில், சரண்யா, மோகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்து 5 நாட்களுக்கு பிறகு இன்று தனது ஊருக்கு திரும்பியுள்ளார். சரண்யா. இந்த தகவலறிந்த அவரது சகோதரர் சக்திவேலு மற்றும்அவரது மைத்துனர் ரஞ்சித் ஆகியோர் புதுமண தம்பதிகளை வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சக்திவேல், ரஞ்சித் ஆகிய இருவரும் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். இவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் .

இதனிடையே சம்பவ இடத்தில் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா இன்று இரவு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், இந்த இரட்டைக் கொலை சம்பவம் குடும்ப பிரச்சனை காரணமாக நடைபெற்றுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய இரு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2.64 லட்சம் கடன்” – நிதியமைச்சர் பிடிஆர்

Halley Karthik

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு

Halley Karthik

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டாரா? புதிய திருப்பம்

Jayakarthi