உலகில் சூரிய சக்தியில் இயங்கும் முதல் கார்; சார்ஜ் போடாமல் ஆண்டுக்கு 11,000 கிமீ பயணிக்க முடியும்

உலகின் முதல் சூரிய சக்தியால் இயங்கும் சோலார் வாகனம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது Lightyear நிறுவனம் சுற்றுச் சூழலில் ஏற்படும் காற்று மாசு, மற்றும் ஒலி மாசுவை கட்டுப்படுத்த ஆட்டோமொபைல் துறையில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக,…

உலகின் முதல் சூரிய சக்தியால் இயங்கும் சோலார் வாகனம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது Lightyear நிறுவனம்

சுற்றுச் சூழலில் ஏற்படும் காற்று மாசு, மற்றும் ஒலி மாசுவை கட்டுப்படுத்த ஆட்டோமொபைல் துறையில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் பெட்ரோல் டீசல் இல்லா லக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் CNG விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் தொடர்ந்து மாசு இல்லா வாகனங்களை உண்டாக்கும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள் முனைப்புக் காட்டி வருகின்றன. அதில், Lightyear நிறுவனம், Lightyear 0 என்ற காரை தற்போது அறிமுகம் செய்துள்ளது. Lightyear நிறுவனத்தின் 6 வருட ஆராய்ச்சியிலிருந்து இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், 946 யூனிட்களை மட்டுமே உற்பத்தி செய்ய அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்மைச் செய்தி: ‘சென்னையில் விசாரணை கைதி ராஜசேகர் மரணம்; அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு – மாநில மனித உரிமை ஆணையம்’

இந்த வாகனத்தில், மொத்தமாக ஒரு வருடத்திற்கு 11,000 கிலோமீட்டர் தூரம் நாம் பயணம் மேற்கொள்ளமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூரியசக்தி பேனல் உள்ளே 60KWH பேட்டரி பேக் வசதி உள்ளது. இந்த வாகனத்தில் சோலார் பேனல் டெக்னாலஜி வசதி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 625 கிலோமீட்டர் தூரம் பயணம் செல்லமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாகனம் 100 கிலோமீட்டர் வேகத்தை மிகக் குறுகிய நொடிகளில் அடைந்துவிடும் எனவும், அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வாகனத்தின் விலை 250,000 யூரோ எனவும், இந்த வாகனத்தின் முன்பதிவு இன்னும் சில மாதங்களில் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.