பொள்ளாச்சி புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் – பொள்ளாச்சி ஜெயராமன் வாக்குறுதி!

பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என துணை சபாநாயகரும் அதிமுக வேட்பாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் வாக்குறுதி அளித்துள்ளார். பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில், அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் வாக்கு…

பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என துணை சபாநாயகரும் அதிமுக வேட்பாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் வாக்குறுதி அளித்துள்ளார்.

பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில், அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது, கடந்த ஐந்தாண்டுகளில் பொள்ளாச்சி தொகுதிக்கு தேவையான நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டடம், அனைத்து கிராமங்களுக்கும் முறையாக குடிநீர் வழங்கியது, குளங்கள் தூர்வாரப்பட்டது, தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனை, குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் எனத் தொகுதிக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அவர், பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அறிவிக்கப்படும் என அவர் வாக்குறுதி அளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.